கல்வித்துறை சிறப்பு அம்சங்கள் : தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை ரூ.4,500ஆக அதிகரிப்பு

தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினா

Update: 2021-02-02 20:58 GMT
தமிழக அரசு இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் உறுதிபூண்டுள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை 3 ஆயிரத்து 500ல் இருந்து 4 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு அவர், பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார்.திறன் மேம்பாட்டுக்கு தமிழக அரசுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இதற்காக அரசு ரூ. 683 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளதாக கூறினார். இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.கொரோனா காலத்திலும், கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் கல்வி கற்பது உறுதி செய்யப்பட்டதாகவும்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டினார்.ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் தொடர 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்