திறப்பு விழாவிற்கு முன்னதாக அடித்து செல்லப்பட்ட பாலம்
பீகாரில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், திறப்பு விழாவிற்கு முன்னதாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், திறப்பு விழாவிற்கு முன்னதாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபாடி கிராமத்தில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வதற்காக புதிதாக பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.