மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் - செப். 14-ம் தேதி முதல் மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்

செப்டம்பர் 14-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2020-09-01 03:06 GMT
செப்டம்பர் 14-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற இரு சபைகளும் மார்ச் 23-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சமூக இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டு,  நாடாளுமன்ற மக்களவை செப்டம்பர் 14-ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தொடங்குவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாநிலங்களவை அமர்வு பிற்பகல் 3 மணியளவில் தொடங்குகிறது என்றும், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் விடுமுறை இன்றியும் மாநிலங்களவையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக்கூட்டத் தொடரில் கொரோனா தொற்று பிரச்சனை, வரலாறு காணாத பொருளாதார சரிவு, சீனாவின் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சனைகளை, எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும் என தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்