"கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான்" - காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவ திட்டமான ஆயுஷ்மான் பாரத் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பொதுமுடக்கம், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் விழுக்காடு இந்தியாவில் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.