வியாபாரிகள் இடையே நிலவும் கொரோனா பயம் - விலக்கு இருந்தும் 95 % மருந்தகங்கள் மூடல்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விலக்கு இருந்தும் மாநிலம் முழுவதும் 95 சதவீத மருந்தகங்கள் திறக்கப்படவில்லை எனவும் வியாபாரிகள் இடையே நிலவும் கொரோனா அச்சமே இதற்கு காரணம் என்றும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்கள் நலன் கருதி, மாநில அரசு மருந்து தட்டுபாடுகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.