ரூ.2 ஆயிரம் நோட்டுகள் விவகாரம் : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன.
ஏ.டி.எம். மையங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது மக்களுக்கு சிரமமாக இருப்பதால், சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பது என இந்தியன் வங்கி உள்பட சில வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்தநிலையில், ஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ஏ.டி.எம்.களில் அதிக 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதற்கு வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.