ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் : வாட்ஸ் ஆப், கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவு
ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு காவல் ஆணையர், வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான சிசிடவி பதிவுகள், வாட்ஸ் ஆப் உரையாடல்களை பாதுகாக்க கோரி பேராசிரியர்கள் 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரீசிலித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனு மீது பதில் அளிக்குமாறு, டெல்லி காவல் ஆணையர் , ஆப்பிள், வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்களை தந்து உதவுமாறு தில்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜாய் திர்கி நாளேடுகளில் விளம்பரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.