"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுங்கள்" - மத்திய அரசுக்கு மாயாவதி வேண்டுகோள்
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டத்தை திரும்பப் பெறாத நிலையில், எதிர்க்காலத்தில் எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படும் என மாயாவதி எச்சரித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கக் கூடாது என மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கோரியுள்ளதாகவும், இது குறித்து உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் எழுப்புவோம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.