ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க கருவி : பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு
ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சுர்ஜித் பெயரில் புதிய கருவியை புதுச்சேரி பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்க சுர்ஜித் பெயரில் புதிய கருவியை புதுச்சேரி பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். நடுக்காட்டுப்பட்டியில் 2வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம், புதுச்சேரி தனியார் பள்ளியில் பயிலும் தமிழரசன் மற்றும் அரவிந்த் ஆகியோரின் மனதை மிகவும் பாதித்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர்கள் ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கருவியை உருவாக்கி அதற்கு சுர்ஜித் பெயரை சூட்டினர். அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட சுர்ஜித் கருவிக்கு 2ஆம் பரிசு கிடைத்தது. இந்த கருவி 5அடி ஆழத்தில் சிக்கி உள்ள குழந்தையை எளிதில் மீட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.