ஏர்டெல்,வோடபோன்,ஐடியா நிறுவனங்களுக்கு புதிய நெருக்கடி

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய 92 ஆயிரம் கோடி ரூபாயை நிலுவையை செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-24 19:29 GMT
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இதர வருமானங்களையும் கணக்கிட்டு லைசன்ஸ் கட்டணம் மற்றும் அலைக்கற்றை கட்டணத்தை மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் தொலைத் தொடர்பு சேவையில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், மத்திய அரசு கணக்கிட்ட முறை சரியானது என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அரசுக்கு நிலுவை வைத்துள்ள 92 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்