"ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி" - அமலாக்கத் துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.;

Update: 2019-10-17 19:26 GMT
ஐ.என்.எக்ஸ் மீடிய முறைகேடு வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.  தற்போது திகார் சிறையில் அவர் உள்ளார். இதற்கிடையே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை சார்பில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், ப.சிதம்பரத்தை 7  நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் படி வரும் 24-ம் தேதி வரை, அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்