காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை

காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என்று, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.

Update: 2019-10-13 04:13 GMT
காஷ்மீரில் நாளை முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என்று, அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால், படிப்படியாக இந்த சேவைகள் திரும்ப வழங்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் மாநில முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால், 70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில், செல்போன் சேவை மீண்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். மாநிலத்தின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்தபின், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்