சுற்றுச் சூழலை பாதுகாக்க 64 நகரங்களுக்கு 5,595 மின்சார வாகனம் - மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
ஸ்மார்ட் சிட்டி உள்பட நாட்டில் உள்ள 64 நகரங்களுக்கு ஐந்தாயிரத்து 595 மின்சார வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி உள்பட நாட்டில் உள்ள 64 நகரங்களுக்கு ஐந்தாயிரத்து 595 மின்சார வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மின்சார பேருந்து , கார், வாகனம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் மாசுவை கட்டுபடுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.