வியாபாரிகளுக்கு பென்சன் வழங்கும் திட்டம் - செப். 7 - ல் துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 7 ம் தேதி துவக்கி வைக்கிறார்.
சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி, வருகிற 7 ம் தேதி, துவக்கி வைக்கிறார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன்பெறுவார்கள் என்றும்,ஜிஎஸ்டியில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு கீழ் வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள், இதில் பயன்பெற முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள், இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்த சிறு வியாபாரிகளுக்கு, அவர்கள் 60 வயது நிரம்பிய பிறகு, மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 3 கோடி சில்லரை வியாபாரிகள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.