ரஷ்யாவுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி
2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி விமானநிலையத்தில் இருந்து நேரடியாக விளாதிவோஸ்டோக் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்குள்ள கப்பல் கட்டுமான தளத்துக்கு அதிபர் புதினுடன் சென்று பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இந்தியா-ரஷியா இடையேயான உறவுகள் குறித்து இருதரப்பு குழுக்களோடு சேர்ந்து பேச்சு நடத்துகின்றனர். பின்னர் பொருளாதார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, விளாதிவோஸ்டோக் நகரில் நடைபெறும் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றிலும் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.