சந்திரயான் - 2 நிலவில் தடம்பதிக்கும் வரலாற்று நிகழ்வு : பிரதமருடன் பங்கேற்கும் 60 மாணவ, மாணவிகள் தேர்வு
வினாடி வினா போட்டியின் மூலம் இஸ்ரோ தேர்வு
சந்திரயான் - 2 நிலவின் தென் பகுதியில் வரும் 7 ஆம் தேதி தடம் பதிக்க உள்ளது. அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளன்று, இஸ்ரோவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பிரதமருடன் இந்த விழாவில் பங்கேற்க 60 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, இஸ்ரோ ஆன்லைனில் நடத்திய வினாடிவினா போட்டியில் 10 நிமிடங்களில் அதிக கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளில் 2 பேர் மாநில வாரியாக தேர்வு செய்துள்ளது. இந்த 60 மாணவ, மாணவிகளும் பிரதமருடன், சந்திரயான் -2 நிலவில் தடம் பதிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.