சென்னையில் வேலை தேடி தவித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் கதறல்
சென்னையை அடுத்த, நங்கநல்லுர் நேரு காலனியை சேர்ந்தவர் உமா மகேஷ். 26 வயதான இவர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் பழகி வந்துள்ளார். அப்பெண்ணிற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவ்வப்போது வெளியில் அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அப் பெண்ணுடன் பாலியல் உறவில் இருக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மகேஷின் கொடுமை தாங்காமல் பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் மகேஷ் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், பணம் பறித்ததும் உண்மை என தெரியவந்தது.இதனை தொடர்ந்து இளைஞர் மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரிடம் இருந்த 3 செல்போன்களும் பறிக்கப்பட்டன.