2018-19 நிதியாண்டில் 6,860 போலி நிறுவனங்கள் பதிவு நீக்கம் : கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் தகவல்
சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது.
சட்ட விரோத பணப் பரிமாற்றத்துக்காகவே, பல நிறுவனங்கள் பெயரளவில் தொடங்கப்படுகின்றன. இத்தகைய போலி நிறுவனங்கள், ஷெல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் மட்டும் தமிழகம் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் 6 ஆயிரத்து 860 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் பெயர்கள் நிறுவனங்களுக்கான பதிவாளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.