நன்கொடை தராத மாணவர் மீது தாக்குதல்

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே காயம்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவரிடம், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது.

Update: 2019-06-23 19:00 GMT
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே காயம்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவரிடம், மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் நன்கொடை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தர மறுத்ததால் அந்த மாணவரை அந்த சங்கத்தினர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டு தீவிர விசாரணை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்