நிபா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப் பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப் பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். மேலும், நிபா வைரஸ் தாக்கத்தில் இருந்து, புதுச்சேரி மக்களை பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.