மழை வேண்டி சிறப்பு பூஜையில் அமைச்சர்கள் : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு - போராட்டம்

கர்நாடகா அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Update: 2019-06-07 04:19 GMT
கர்நாடகா அறநிலையத்துறையின் கீழ் உள்ள பெரும்பாலான கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள ரிஷ்ய சித்தேஸ்வரா கோவிலில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவகுமார் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பரமேஸ்வர் நாயக் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வழிபட்டனர். இந்நிலையில் அரசின் இந்த செயல்பாட்டை கண்டித்து பெங்களூரு நகரில் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியதும், இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்காக்க தவறியதுமே, மழை குறைவுக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்