பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்ததன் எதிரொலி - இந்திய பங்குச்சந்தைகளில் உயர்வு

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திய பங்குச்சந்தைகளில் மாற்றம் காணப்பட்டது.

Update: 2019-05-27 11:24 GMT
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து இந்திய பங்குச்சந்தைகளில் மாற்றம் காணப்பட்டது. வாரத்தில் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச்சந்தைகளில், முதலீட்டாளர்கள், பல்வேறு நிறுவனப்பங்குகளை வாங்கி முதலீடு செய்தனர். பாஜக அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே நிலவி வருவதால், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. இதன் படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து, 39 ஆயிரத்து 760 - ல் நிலை கொண்டுள்ளது. இதே போல், தேசிய பங்குச் சந்தை குறியீட் எண் நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 945 ஆக காணப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்