மோடி அரசில் மீண்டும் இடம்பெறுவாரா அருண் ஜெட்லி?

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜெட்லி மீண்டும் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2019-05-24 17:22 GMT
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அருண் ஜெட்லி மீண்டும் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது அவரின் நிதியமைச்சர் பொறுப்பு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலுக்கு ஒதுக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய பிறகு மீண்டும் நிதி அமைச்சர் பொறுப்பு அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிஸ்ஜார்ஜ் ஆனார். அவரது  உடல்நிலை ஆரோக்கியமாக இல்லாததால் நரேந்திர மோடி அரசில் மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்