உயர் பாதுகாப்பு பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளையன்
சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. இல்லம் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகள் வசிக்கும் லட்சுமி நகர் காலனியில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. லட்சுமி நகர் காலனியை சேர்ந்த நடேசன் காப்பி கடை நடத்தி வருகிறார். கோடை விடுமுறைக்கு உறவினர்கள் வீட்டுக்கு குடும்பத்தினர் சென்ற நிலையில், வீட்டில் மேற்பகுதியில் உள்ள அறையில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை 3 மணிக்கு கடைக்கு புறப்பட்ட நடேசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேல் அறையில் இருந்து கீழே வந்த போது, நுழைவு வாசல் கதவு மற்றும் பெட்ரூம் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவை திறந்த பார்த்த போது அதிலிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வெள்ளி பொருட்களை விட்டுவிட்டு சென்றுள்ளனர். நடேசன் புகாரின் பேரில், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.