மேற்கு வங்கத்தில் ஃபானி புயல் ஆவேசம்...90 கி.மீ. வேகத்தில் சுழன்றடிக்கும் காற்று

ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியுள்ளது.

Update: 2019-05-04 02:31 GMT
ஒடிசாவில் நேற்று கரையை கடந்த ஃபானி புயல், வடக்கு மற்றும் வடகிழக்காக நகர்ந்து ஆறு மணி நேரத்தில் தீவிர புயலாக மாறியுள்ளது. அதிகாலை 3.20 மணி நிலவரப்படி, மேற்கு வங்கத்தின் காரக்பூரில் கரையை கடக்க தொடங்கிய நி​லையில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழையும் கொட்டி வருகிறது. இதனிடையே, பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையம் காலை 8 மணி வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்