"அனல் வீசும்" - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

'நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Update: 2019-04-03 05:25 GMT
'நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட மாநிலங்களில், இதுவரை குறைவான வெப்பநிலை இருந்து வந்த நிலையில், திடீரென வெப்பம் அதிகரித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை தவிர, பல்வேறு இடங்களில், வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு, ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஷ்கர், உத்தரபிரதேசம் ஆகிய இடங்களில் அனல்காற்று வீசும் என்றும் எச்சரித்தனர். மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிராவில் விதர்பா, மராத்வாடா ஆகிய இடங்களில் அனல் காற்றின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்