நிதிச் சிக்கல் காரணமாக சேவையை குறைத்த ஜெட் ஏர்வேஸ்
மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரம்
நிதிச் சிக்கல் காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் தினசரி 140 ஆக குறைந்துள்ளது எனவும் ஒரு வாரத்தில் 603 உள்நாட்டு விமான சேவைகளும், 382 சர்வதேச சேவைகளும் மட்டுமே அளிப்பதாகவும் தெரிவித்தனர். 2016 -17 நிதி ஆண்டில் வாரத்துக்கு 3 ஆயிரத்துக்கு மேல் விமான சேவைகளை அளித்த ஜெட் ஏர்வேஸ், நிதி நெருக்கடியால், விமான சேவைகளை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் 1 முதல் விமானிகளும் ஊதிய நிலுவை காரணமாக வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.