பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது

பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Update: 2019-03-10 17:57 GMT
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கும், அதன் தலைவன் மசூத் அசாருக்கும் அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.சென்னை அடையார் கிரவுன் பிளாசவில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்று பேசிய அவர், 2014க்கு பிறகு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக தலைவர்களை சந்தித்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டதாக தெரிவித்தார்.பல எச்சரிக்கைக்கு பின்னரும் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் பாகிஸ்தான் ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை என்ற போர்வையில் எல்லை தாண்டிய தாக்குதலை ஆதரித்துக்கொண்டு மறுபுறம் அணுஆயுத அச்சுறுத்தலுடன்  இரட்டை அணுகுமறை கொண்டிருப்பதாக கூறினார்.புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது துல்லியமாக லேசர்ஆயுதங்களுடன் இந்திய படை தாக்குதலை நடத்தியது என்று அவர் தெரிவித்தார்.பெண் முன்னேற்றம் குறித்து பேசிய அவர், நாடு முழுவதும் 9கோடி பெண்கள் முத்ரா திட்டத்தின் மூலம் பயன் அடைந்து உள்ளனர்.அனைத்து ஆட்சிகளிலும் பெண்களுக்கு ஏதோ ஒரு நல்ல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் அது அவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை என்று குறிப்பிட்ட அவர்,பெண்களின் தன்னம்பிக்கை வளர அவர்களை 10 இடங்களில் வைக்க வேண்டும் என்று கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்