பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் எலிமருந்தை சாப்பிட்டு 14 வயது சிறுவன் தற்கொலை
பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கததால் 9-ஆம் வகுப்பு மாணவன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்கததால் 9-ஆம் வகுப்பு மாணவன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், உதயகிரி மண்டலம் புள்ளையா பள்ளியை சேர்ந்த சீனிவாசலு, மௌனிகா தம்பதியின் ஒரே மகன் வெங்கடாத்ரி.
அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக வேலை பார்க்கும் தந்தையிடம் செல்போன் வாங்கித் தருமாறு வெங்கடாத்ரி தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.
தற்போது பணம் இல்லை என்றும், விரைவில் வாங்கி கொடுக்கிறோம் என்றும் பெற்றோர் கூறி யிருக்கிறார்கள்.
ஆனால் சமாதானம் ஆகாத வெங்கடாத்ரி, கடந்த சனிக்கிழமை தனது தாய் மற்றும் தந்தையுடன் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு வெங்கடாத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வெங்கடாத்ரி திங்கள் கிழமை உயிரிழந்தார்.
செல்போனுக்காக ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.