அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : களைகட்டும் வைஷ்ணவி தேவி கோயில்

காஷ்மீர் மாநிலம் கட்ராவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2018-12-19 02:57 GMT
கடல் மட்டத்தில் இருந்து 5,300 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை கோயிலுக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டில் 82 லட்சத்து 60 ஆயிரமாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வருகையால் இந்த பகுதியில் வியாபாரமும் களைகட்டி உள்ளது.
 
Tags:    

மேலும் செய்திகள்