தேர்தல் பணியை முடுக்கி விட்டார், பிரதமர் மோடி
தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி, புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மக்களவை தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி, புதுடெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்திற்கு செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசை போல, வேறு எந்த அரசும், தென் இந்தியாவுக்கு நன்மைகள் செய்தது கிடையாது என்றார். தமிழக இளைஞர்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், பிரதமர் நரேந்திரமோடி, அப்போது சுட்டிக்காட்டினார்.