பாஜக ஆட்சியில், பொருளாதார வளர்ச்சி : வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதம்

பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-01 16:59 GMT
பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடு என்றார். 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 7 ஆக இருந்தது என சுட்டிக்காட்டிய சுஷ்மா சுவராஜ்,.  கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில், 7 புள்ளி 3 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தாண்டு, பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்