"இயற்கைக்கு முரணான பாலியல் உறவு குற்றச்செயலா?" இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
* இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றச் செயலாக கருதும் இந்திய தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்யலாமா என்பது குறித்து, உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
* இயற்கைக்கு முரணான பாலியல் உறவை குற்றம் எனக் கூறும், இந்திய தண்டனை சட்டத்தின் 377-வது பிரிவை நீக்க வேண்டும் என ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.,
* இந்தநிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டில், 377-வது சட்டப்பிரிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
* இந்த தீர்ப்பிற்கு எதிராக கடந்த 2013ம் ஆண்டு தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ததோடு, ஓரினசேர்க்கை உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான உடலுறவு விஷயங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 377ஐ மீண்டும் உறுதி செய்தது.
* இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
* வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.