'காமாக்யா தேவி' கோவில் திருவிழா - அருள் வந்து சாமியாடிய பக்தர்கள்...

அசாம் மாநிலம் குவகாத்தி அருகே 'காமாக்யா தேவி' கோவிலில் 3-ம் நாள் திருவிழா நேற்று தொடங்கியது.

Update: 2018-08-19 12:00 GMT
அசாம் மாநிலம் குவகாத்தி அருகே 'காமாக்யா தேவி' கோவிலில் 3 நாள் திருவிழா நேற்று தொடங்கியது.இந்த திருவிழாவில் பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க,பக்தர்கள் அருள் வந்து சாமியாடினார்கள். கோவிலில் சாமியாடியவர்களிடம் பலரும் வந்து ஆசி பெற்று சென்றனர்.திருவிழாவின் இறுதி நாளில் காமாக்யா தேவிக்கு ஆடு மற்றும் கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது.நிலாச்சல் மலைக்குன்று பகுதியில் நடைபெறும் இந்த திருவிழாவுக்காக ஒரு மாத காலம் விரதமிருந்த பக்தர்கள்,இசைக்கருவிகளை முழங்கியபடி நடனமாடினர்.
Tags:    

மேலும் செய்திகள்