கிராம சாலை அமைக்க சச்சின் டெண்டுல்கர் நிதியுதவி

கிராம சாலை அமைக்க சச்சின் டெண்டுல்கர் நிதியுதவி ரூ.22 லட்சம் செலவில் சாலைப் பணி - ஆட்சியர் ஆய்வு

Update: 2018-07-03 14:19 GMT
பெரம்பலூர் நகராட்சி எல்லையை ஒட்டி உள்ள எளம்பலூர் கிராம விரிவாக்க பகுதியில் அமைந்துள்ளது, கோல்டன் சிட்டி. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் இந்த பகுதியில் ஐந்து ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாலை அமைக்க 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார். இந்த தொகையில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட ஆட்சியர் சாந்தா பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கிய சச்சினுக்கு மனதார நன்றி தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்