எம்.பி.பி.எஸ்., அரசு இடங்களை அறிவிப்பதில் குளறுபடியா?

முதலில் 3355...பிறகு 3328....தற்போது 3393....இதில் எது சரி?

Update: 2018-06-28 08:35 GMT
எம்.பி.பி.எஸ்., அரசு இடங்களை அறிவிப்பதில்  குளறுபடியா?



மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு மொத்த இடங்களை அறிவிப்பதில் தொடரும் குழப்பங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான இடங்களை அறிவிப்பதில் ஒவ்வொரு ஆண்டும் குளறுபடியும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. அவ்வப்போது, எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

* கடந்த  19ஆம் தேதியன்று, எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீடு 2 ஆயிரத்து 445 எனவும், ராஜா முத்தையா கல்லூரியில் 127 மற்றும்  தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 783 எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி அரசு ஒதுக்கீட்டில் மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்கள் 3 ஆயிரத்து 355 என தெரிவிக்கப்பட்டது. 

* இன்று தரவரிசை பட்டியல் வெளியிடுவதற்கு முன் கொடுத்த தகவலில், அரசு ஒதுக்கீடு 2 ஆயிரத்து 447 என்றும்  ராஜா முத்தையா கல்லுாரியில் 127 மற்றும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. கல்லுாரியில் 65 இடங்கள் தனியார் கல்லுாரியில் அரசு ஒதுக்கீடு 689  இடங்கள் என கூறப்பட்டது. இதன்படி மொத்த இடங்கள் 3 ஆயிரத்து 328 இடங்கள் என தெரிவிக்கப்பட்டது.

* ஆனால், தர வரிசை பட்டியலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் மொத்தம்  3 ஆயிரத்து 393 எனவும் அறிவித்தார். 

* முதலில் சொன்ன 3 ஆயிரத்து 355 இடங்கள் சரியா அதன் பிறகு சொல்லப்பட்ட 3 ஆயிரத்து 328 இடங்கள் சரியா இல்லை அமைச்சர் அறிவித்த 3 ஆயிரத்து 393 இடங்கள் என்பது சரியா என தெரியாமல் மாணவர்களும், பெற்றோரும் குழப்பமடைந்துள்ளனர். 



Tags:    

மேலும் செய்திகள்