பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் - மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2018-06-17 05:48 GMT
பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் 
4- நிர்வாக குழுக்கூட்டம் டெல்லியில் இன்று காலை
தொடங்கியது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுனர்கள்,  மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதில் விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துதல், தேசிய ஊட்டச்சத்து திட்டம், இந்திரா தனுஷ் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. 

காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளை கொண்டாடுவது உள்ளிட்டவை  குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்