பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தார் குடியரசு தலைவர்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

Update: 2018-06-15 09:51 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை மேற்கொண்டது. 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் கேட்டது. இதுதொடர்பாக தந்தி டி.வி.யில் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சகம் இந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் , குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளித்தது. இந்த பரிந்துரை மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை   பரிசீலித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதனால் 7 பேரின் விடுதலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க, தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்கும்  என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்