உணவு, தண்ணீர் இன்றி 75 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் துறவி
உணவு, தண்ணீர் இன்றி 75 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் துறவியை கண்டு, விஞ்ஞானிகள் குழப்பமடைந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தின், சரோட் என்ற கிராமத்தை சேர்ந்த பிரஹலாத் ஜனி என்ற துறவி ஒருவர் 75 ஆண்டுகளுக்கும் மேலாக உணவு தண்ணீரின்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்ந்து வருகிறார். கடவுளின் அருளால் தமக்கு இந்த சக்தி கிடைப்பதாகவும், அதனால் உணவு தண்ணீர் தேவையில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார். வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என பல முறை இவரை தொடர்ந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், துளியும் உணவு, தண்ணீர் அருந்தாமல், இருப்பதை பார்த்து வியந்துள்ளனர். இவரிடம் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் ஆசி பெற்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.