புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் தீபாவளி போனஸாக வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பணியாளர்கள் ஈட்டிய ஊதியத்தில் 8 புள்ளி 33 சதவீதத்திற்குள் இருக்க வேண்டுமெனவும், கருணைத்தொகை குறைந்தபட்சம் 7 ஆயிரம் ரூபாய் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனஸ் தொகையானது, லாபகரமாக இயங்கும் வாரியங்களான சாராய வடி ஆலை, பிப்டிக், மின் திறல் குழுமம் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.