இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-07-2023)

Update: 2023-09-28 17:55 GMT

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு..... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

முழு அடைப்பு எதிரொலியாக பெங்களூரு, மண்டியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.... நள்ளிரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு...... சித்தா பட புரோமோஷன் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு எதிரொலியாக மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழக டிஜிபி உத்தரவு..... கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்

கர்நாடகாவில் நாளை பந்த் எதிரொலியாக தமிழக எல்லை வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும்... தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்