இயக்குநர் பாரதிராஜாவின் மண்வாசனை வெளிவந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் நினைவு கூர்ந்துள்ளார்... "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாடலில் இடம்பெற்ற "ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் வெக்க நெறம் போக மஞ்சக் குளிச்சேன்" என்ற வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் இன்னும் புகார் வருவதாக கிண்டலாகத் தெரிவித்த வைரமுத்து அதற்கான விளக்கத்தையும் தெரிவித்தார்... "வெட்கத்தின் சிவப்பு நிறம் பார்த்து அது ஆசையின் அழைப்பென்று கருதி முரட்டு மாமன் திருட்டு வேலை செய்துவிடக் கூடாது" என்பதற்காக மஞ்சள் பூசி வெட்கத்தை மறைப்பது தான் அதன் விளக்கம் என்று குறிப்பிட்ட வைரமுத்து, "இந்த 40 ஆண்டுகளில் காதலின் விழுமியம் மாறியிருக்கிறது என்றும் வெட்கப்பட ஆளுமில்லை... மஞ்சளுக்கும் வேலையில்லை" எனவும் கருத்து தெரிவித்துள்ளார்...