"அதிர்ச்சி.." - மன உளைச்சலில் அமலா பால்

Update: 2024-08-31 14:56 GMT

ஹேமா குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக நடிகை அமலா பால் பதிவிட்டுள்ளார். மலையாள நடிகைகளின் புகார்களோடு, நீதிபதி ஹேமா கமிட்டி தயாரித்த அறிக்கை வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அமலா பால் வலியுறுத்தியுள்ளார். மீண்டும் பாலியல் அத்துமீறல் ஏற்படாத வகையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்