லியோ படத்தின் ஃப்ளாஷ் பேக் கதை உண்மையா ? பொய்யா ?.. தியரிகளை அள்ளி வீசிய விஜய் ரசிகர்கள்..!
- கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து...தென்னிந்தியாவின் நம்பர் 1 இயக்குநராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
- ஹாலிவுட்டின் அவெஞ்சர்ஸ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் போன்று...கோலிவுட்டிலும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் உருவாக்கி..ஒவ்வொரு காட்சிக்கும்..
- வசனத்திற்கும் பின் பல ரகசிய தகவல்களை உள்ளடக்கி ரசிகர்களை மலைக்க வைப்பதே இவரது ஸ்பெஷாலிட்டி.
- இதனால் லோகேஷ் கனகராஜின் படம் என்றாலே அதீத எதிர்ப்பார்ப்புடன் திரையரங்கை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்..பேனா.. பேப்பருடன் செல்வதும் வழக்கம் என்றே சொல்லலாம்..
- ஏனெனில் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளை உன்னிப்பாக கவனித்து அதன் பின்னுள்ள அர்த்தத்தை துல்லியமாக கண்டறிவதோடு...ஃபேன்ஸ் தியரி என்ற பெயரில்..லோகேஷ் ஸ்கிரிப்டில் இல்லாத கதைகளையும் அளந்து விடுவர்.
- அதிலும் லியோ படமும் எல்.சி.யூவிற்குள் வருவதால் ஃபேன்ஸ் தியரிகள் அதிகரித்தன.
- படத்தின் ஆரம்பக்கட்ட ஹைனா சீன் தொடங்கி... கிளைமாக்ஸில் கமல் போன் செய்வது வரை பல கதைகள் கிளம்பின.
- அதிலும் லியோ படத்தில் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் இரண்டாம் பாகம் சுமார் தான் என விமர்சனங்கள் எழ, ஃப்ளாஷ் பேக் சீனே பொய் என ஃபேன்ஸ் தியரிகள் எழுந்தன.
- ஹாரோல்டு தாஸ், லியோவை சுட்டதாக கதையில் காண்பிக்கப்பட்ட நிலையில், எங்கே..? குண்டடி பட்ட தழும்புகள் உடலில் இல்லையே என ஒரு தரப்பு குழம்பி போய் நிற்க..
- மற்றொரு தரப்போ..மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தின் பார்வையில் தான் லியோவின் கதை சொல்லப்பட்டது.
- இதனால் இந்த கதையே பொய் தான், லியோவின் கதையை பார்த்திபன் சொன்னால் மட்டுமே நிஜம் என கதைகளை அளந்தனர்.
- இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின், இருதயராஜ் டிசோசா என்ற கதாபாத்திரம் சொன்னது பொய்யானதாக கூட இருக்கலாம் என ட்விஸ்ட் வைத்தார்.
- மேலும் மன்சூர் அலிகான் ஃப்ளாஷ்பேக் சொல்லும் பகுதியை காட்சிப்படுத்தும் போது, என்னுடைய பார்வையில் இருந்து நான் இந்த கதையை சொல்கிறேன் என்ற டயலாக் இருந்தது ஆனால் அவர் சொல்வது பொய் என தெரிந்து விடும் என்பதால் அதனை எடுத்துவிட்டோம் என கூறியுள்ளார்.
- இதனால் லியோ படத்தின் 2ம் பாகம் லியோவின் நிஜக்கதையுடன் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்க..பிளாஷ்பேக் பொய் என்றால் ஏன் அதனை படத்தில் வைக்க வேண்டும் ?
- கொடுத்த காசுக்கு திருப்திகரமாக படம் பார்த்து விட்டு வர வேண்டிய ரசிகர்களின் ஆவலை வீணடிப்பதாகவும் ஒரு சில தரப்பினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
- மேலும் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட ஃபேன்ஸ் தியரியையே லோகேஷும் காப்பி அடித்து கூறி..படத்தின் விமர்சனங்களை சமாளித்து வருகிறார் என்றும் விமர்சனங்கள் எழ..
- லியோ படம் குறித்து எழும் விமர்சனங்களை தான் ஏற்றுக்கொள்வதாக கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.