பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹாவிற்கு சிக்கல்... பறந்த உத்தரவு... கோர்ட் அதிரடி
கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிகளை மீறி பங்களா கட்டுவதாக முகமது ஜுனைத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் பாபி சிம்ஹா 2,400 சதுர அடிக்கு கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு, 4,000 சதுர அடிக்கு பணிகளை மேற்கொண்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரகாஷ்ராஜ் உரிய அனுமதி பெறாததால், அவரது 2 கட்டடங்களின் கட்டுமானம் நிறுத்திவைக்கப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர், மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.