கவுதம் மேனன், அஜித்குமார் கூட்டணியில் தயாரான 'என்னை அறிந்தால்' திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் ஒன்பது ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.