மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ஷௌபின் ஷாஹிர், கூலி திரைப்படத்தில் இணைந்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. முன்னதாக, இப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் போஸ்டர் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருந்தார். அதன்படி, ஷௌபின் ஷாஹிரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தயால் என்ற அவரது பாத்திரத்தின் பெயரும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.