அண்ணா, கருணாநிதி,எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா 5 முன்னாள் முதல்வர்களோடு பணி புரிந்தவர்.. 167 திரைப்படங்களை தயாரித்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார்

Update: 2023-07-28 03:40 GMT

ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, பெரும் சாதனைகள் புரிந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் பிறந்த தினம் இன்று.

1907ல் காரைகுடியில் பிறந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்,

1932ல், சென்னையில், சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிராமபோன் உற்பத்தி நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

1935ல் அல்லி அர்ஜுனா என்ற படத்தை தயாரித்து, திரைப்படத் துறையில் கால் பதித்தார். 1940ல் காரைகுடியில் பிரகதி ஸ்டுடியோஸை தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களை தயாரித்தார்.

1945ல் ஏவிஎம் புரெடக்சன்ஸ் நிறுவனத்தை தொடங்கி, மிகப் பெரிய ஸ்டுடியோவை சென்னை, வட பழனியில் உருவாக்கினார்.

சபாபதி, நாம் இருவர், வாழ்க்கை, வேதாள உலகம் போன்ற வெற்றி படங்களை தயாரித்து, இயக்கி பெரும் புகழ் பெற்றார்.

டப்பிங் மற்றும் பின்னணி பாடல் முறையை தமிழ் திரைப்படங்களில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்.

வைஜெயந்திமாலா, டி.ஆர்.மகாலிங்கம், சிவாஜி கனேசன், மேஜர் சுந்தர்ராஜன், கமலஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய ஐந்து முன்னாள் முதல்வர்கள் ஏவி.எம்மோடு பணிபுரிந்துள்ளார்கள்.

ஏ.வி.எம் தயாரித்த "ஓர் இரவு" திரைப்படத்தின் 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதை வசனத்தை, ஒரே இரவுக்குள், எழுதி முடித்துக் கொடுத்தார் சி.என்.அண்ணாதுரை.

1952ல் சிவாஜியின் முதல் படமான பராசக்தி திரைப்படத்தை தயாரித்து, தமிழ் திரைப்பட உலகில் புதிய அத்தியாத்தை தொடங்கி வைத்தார்.

இந்தி திரைப்படத்துறையிலும் முத்திரை பதித்தார். ஏவி.எம் அறக்கட்டளையை தொடங்கி பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

167 திரைப்படங்களை தயாரித்த ஏ.வி. மெய்யப்ப செட்டியார் 1979ல், தமது 72ஆவது வயதில் மறைந்தார்.

திறன்மிக்க கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை அடையாளம் கண்டு தமிழ் சினிமாவுக்கு அளித்த, ஏவி.மெய்யப்ப செட்டியார் பிறந்த தினம் 1907 ஜூலை 28.

Tags:    

மேலும் செய்திகள்