"ஜெயிலர்" இசை வெளியீட்டு விழா ஏற்பாட்டில் வடமாநில ஊழியருக்கு நேர்ந்த விபத்து
ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகளின் போது வடமாநில ஊழியர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றன. அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 15 அடி உயரத்தில் விளக்குகளை அமைத்துக் கொண்டிருந்த அசாமைச் சேர்ந்த சங்கர் மாலா என்ற 26 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.