"குழந்தைகளை பாதிக்கும் தலசீமியா பற்றி தெரியுமா?".. கனத்த இதயத்துடன் பேசிய நடிகை சுஹாசினி
சர்வதேச தலசீமியா நோய் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனைகள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தரமணியில் நடைபெற்றது. இதில் மருத்துவர் ரேவதி, நடிகை சுஹாசினி மற்றும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்
ரேவதி பெண்களுக்கு கர்ப்ப கால கட்டாய பரிசோதனைகளில் தலசீமியா தொடர்பான
ரத்த பரிசோதனையையும் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் . முன்னதாக பேசிய நடிகை சுஹாசினி, திருமணம் செய்வதற்கு முன்பு ஜாதக பொருத்தம் பார்பதை விட ரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று கூறினார்.